Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Tuesday, March 1, 2011

நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி!

கௌதம் வாசுதேவ் மேனன் வித்யாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு? அவருக்கு என்ன! வித்யாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான! படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும்! இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்.



அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.

கதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் புடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க?

பின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள்! எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம்! ( கொடும சார் ).

கடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும்? இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.

படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா.

படத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா!

Wednesday, June 2, 2010

சிங்கம் -ஆண் சிங்கம்

சிங்கம் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்



நடிகர்கள் – சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன்
எடிட்டிங் - வி.டி. விஜயான்

இயக்கம்- ஹரி
தயாரிப்பு- ஸ்டியோ கிரீன்


கதை பார்க்க போறவங்களுக்கு முதல்லையே காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை.ஹரி தானது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் காரசாரமான காவியம் தான் - இந்த சிங்கம்.

நான் கூட சிங்கதல-சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் ரொம்ப மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் படு ஸ்பீட இருக்கிறது.கோடம்பாக்கத்து செய்தி இது விஜய்கு சொன்ன ஸ்கரிப்டமா நல்ல வேலை அவரு நடிகல.சரி நாம படதுக்கு வரோம்.



அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி சூப்பர்.ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனம் , என்று பல...வசனங்கள் அனல் தெரிகுறது.

ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல, இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.





கதை களம்

கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்காக

சொந்த உள்ளூரிலேயே (நல்லூர்) போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, சென்னையில் ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து என மிரட்டி வரும் பிரகாஷ்ராஜ், கேஸ் ஒன்றில் நல்லூர் ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போடவேண்டும் என கோர்ட் சொல்ல. டூப்ளிகேட் ஆளை செட்டப் செய்து அணுப்பி கையெழுத்து போடு வைப்பதை கண்டுபிடிக்கும் சூர்யா,பிரகாஷ்ராஜ்தான் கையெழுத்துப்போடவேண்டும் என கூறி அடுத்த மூணு மணி நேரத்துக்குள் வரவழைக்க இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த புளித்து போன கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது இந்த சிங்கம்.




சூர்யா - துரைசிங்கம்

துரைசிங்கம்(சூர்யா). பெட்டி கேஸ், வெட்டு கேஸ் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியிலேயே பஞ்சாயத்து பண்ணி அணுப்பி வைத்து காந்தியத்தை வெளிப்படுத்தும் இன்ஸ்பெக்டர். யாராவது புகார் கொடுக்க வந்தால் இரு தரப்பையும் விசாரித்து, கையை கொடுங்க கட்டிப்பிடிங்க என சமாதான புறாவை பறக்கவிடும் காவல் சிங்கம்.




அனுஷ்காவிடம் தியேட்டரில் கலாய்க்கும் ரவுடிகளை யூனி ஃபார்மை கழற்றி வைத்து ஓட ஓட விரட்டி வரட்டி அடிப்பது, பிரகாஷ்ராஜ் அடியாட்களின் காரை கிரீனில் தொங்கவிட்டு தோலுரிப்பது,கேட்க வரும் அசிஸ்டெண்ட் கமிஷனர் - நிழல்கள் ரவி நெஞ்சு விறைத்து நின்று ‘ உங்களுக்கு தோளில் ஒரு சிங்கமும், தொப்பியில் ஒரு சிங்கமும்தான் இருக்கு. ஆனா என் நெஞ்சு மேலேயே சிங்கம் இருக்கு” என துரைசிங்கம் என்ற தனது பெயரை சுட்டிக்காட்டிபேசிக்கொண்டே வந்து நிழல்கள்ரவியை நடுரோட்டில் நிறுத்துவது.பிரகாஷ்ராஜிடம் " நீ சிங்கத்தை சினிமாவில் பார்த்திருப்ப, போட்டோ பார்த்திருப்ப, கூண்டுக்குள்ள பார்த்திருப்ப,காட்டுக்குள்ள தனியா நடக்குறப்ப பார்த்திருப்ப.ஆனா தனியா நின்னு வேட்டையாடி பாத்து இருக்க மாட்ட அடிச்சா ஒனேட்ற வெயிட்.... பாக்குறிய.. பாக்குறிய" என்று கர்ஜிப்பது,, ஹோட்டல் சண்டையில் மேனேஜரிடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்கீங்களா என்று கேட்டுவிட்டு அடியாட்களை தொம்சம் செய்வது என்று விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். 'காக்க காக்க' படத்திற்குப் பிறகு சூர்யா போலீஸ் வேஷம் போட்டிருக்கும் இப்படத்தில் நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா-(காவியா) ….யப்பா!



வேட்டைக்காரன் பிறகு நடித்து இருக்கும் படம். அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார்,நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு போல. கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள், அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசானம் பேசி நடித்து இருக்கிறார். என்ன கொடுமை சார் இது.பாடல் காட்சியில் அனுஷ்காவின் உடையழகும் இடையழகும் யப்பா யப்பா .... போதும் போதும் என்கிற அளவுக்குa ஆடை போட்டு இருகாங்க.

பிரகாஷ்ராஜ் -மயில்வாகனம்



பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில். கையெழுத்து போட காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல்.மொத்தில் தனக்கு கொடுத்த கதபத்ரித்தை கலக்கி இருக்கிறார்.


விவேக் -எரிமலை.....(யாரு அது )

விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார் இல்லை காமெடி செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலை பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு சில கட்சியில் மட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்.

சிங்க‌ம் ப‌டம் ந‌ன்றாகயிருப்ப‌தாக‌ காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'ச‌மீப‌த்தில்' வ‌ந்த‌ ம‌ற்ற தமிழ் ப‌ட‌ங்க‌ள்தான்.

மொத்தத்தில் சிங்கம் - அடிச்சா ஒனேட்ற வெயிட்

கதை - ????????????????
திரைக்கதை - விறுவிறு
வசனம் - ஆயரம் வாட்ட்ஸ்
பாடல் - தில் / ஒன்று பாஸ்

ஆக்‌ஷன் - லாங் பஞ்ச்
ஒளிப்பதிவு - ஓகே
எடிட்டிங் -
தத்தித் தாவுகிறது

Monday, February 15, 2010

அசல்




பாவம் நம்ம அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா
ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர்.

சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில்கதைஎன்றுவருகிறது. நம்ம
தலஇணை இயக்கம் வேறுசெய்திருக்கிறாராம். கதை, திரைக்கதை... பாகப்பிரிவினை காலத்திலேயேநங்கூரம் இட்டிருக்கிறதே?

படத்தில் அசலான சமாச்சாரம் அஜீத் மட்டுமே. இவ்வளவு மட்டமான படத்தில்கூட மிடுக்காக கவர்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. இருந்தாலும் யார்அடித்தாலும் தல அசராது அடித்துக் கொண்டேயிருக்கும் என்பது தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அங்கிள்தோற்றத்தில் இருக்கும் அஜித் சூப்பர், இளைய தளபதிக்கு ஆண்டுக்கு ஆண்டு வயதுகுறைந்து கொண்டே போகிறது. தலைக்கோ வருடா வருடம் நான்கைந்து வயதுகூடுகிறது.

அஜித் பஞ்ச் டயலாக் எதையும் பேசவில்லை என்பது ஆறுதல். மொட்டையடித்தசுரேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபுவின் தமிழ் சினிமா உலக வாழ்க்கைஆராயப்பட வேண்டிய ஒன்று. சின்னத்தம்பி மாதிரி எவர்க்ரீன் ஹிட் படத்தில்நடித்தவர், இப்படியெல்லாம் கூட பரிதாபமான கேரக்டர்களில் நடிக்கிறாரே என்றுஆச்சரியம் ஏற்படுகிறது.
துஷ்யந்தா பாட்டு சூப்பர்.

பழைய எம்.ஜி.ஆர். பங்காளிக் கதை, கிளைமாக்ஸ் சங்கிலியை அறுக்கும்மனோகரா'' உதை, ""பில்லா''நடை, ""வட்டாரம்'' ஆயுத வியாபாரம் எனப் படம்முழுக்க நகல். அசலா ஒரு படம் பண்ணுங்க பாஸ்!

விகடன் மார்க் : 39/
௧00

அசல் - 60% முலாம்- 40%,
குமுதம் ரேட்டிங் : ஓகே


நன் படித்த ஒரு உண்மை ரசிகன் விமர்சனம்.

ஏகனின் ஏமாற்றத்துக்குப் பின் வரும் "தல"யின் 49 ஆவது படம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போடவில்லை. அசலில் முதல் முறையாக அஜித் திரைக்குப் பின்னே படத்துக்காக பங்களிப்பு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தில் உதவி என்றும் இணை இயக்கம் என்றும் போடுகிறார்கள்.

நினைத்ததை முடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதைதான். நியாயமான ஆயுதவிற்பனையாளர் அப்பா அஜித். அவருடைய மூத்த தாரத்து மகன்கள் சம்பத்மற்றும் ராஜீவ் கிருஷ்ணா. அவர்களின் மாமா பிரதீப் ராவத். இளைய தாரத்தின்மகனான இன்னொரு அஜித் மீதுதான் அப்பாவுக்கு பாசம். அப்பா இறந்த பிறகுதவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்களை அஜித் காப்பாற்றமுயல, அவர்களோ அஜித்தையே கொல்ல நினைக்கிறார்கள். ஏன் அவர்கள்அப்படி செய்தார்கள், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் "அசல்".

திரைக்கு முன் ****************

அஜித் - தனக்கு நன்றாக வருவதை மட்டும் செய்வதை தலயிடம் ரசிக்கலாம்.. இரட்டை வேடம்.. இருந்தாலும் அப்பாவுக்கு வேற யாரையாவதுபோட்டிருக்கலாம்.. இன்னும் பில்லாவில் இருந்து வெளியே வரவில்லை... நடிக்கிறார்.. பிறகு நன்றாக நடக்கிறார்.. சுருட்டு எதுக்கு என்றுதான்தெரியவில்லை.. பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது ஆறுதல்.. கெல்லி டோர்ஜி - ஸ்மார்ட்டான வில்லன்.. பாதியிலேயே அவுட்..

சம்பத் - கெரகம்.. சுத்த வேஸ்ட்..

ராஜீவ் கிருஷ்ணா - சைக்கோ மாதிரி .. இது தேவையா?

பிரதீப் ராவத் - இவர் படத்துல எதுக்கு இருக்காருன்னு அவருக்கே தெரியாதுபோல..

சுரேஷ் - வில்லன்களில் ஒரே ஆறுதல்.. கொஞ்சம் சீரியஸ்.... நிறையவேகாமெடி.. அதிலும் கடைசி சீனில் திருந்துவது மிகப்பெரிய காமெடி..

பிரபு - படத்துல இருக்காரா?

யூகி சேது - லூசு டான்... படத்தோட காமெடி பீசு..

பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...

சமீரா - கொஞ்சம் வயசான குதிரை.. ரெண்டு பாட்டுல டான்ஸ் ஆடுறதுக்கு மட்டுமே..

திரைக்குப் பின்
*****************

பிரசாந்த் டி மிசேல் - ஒளிப்பதிவாளர் - ஜமாய்த்து இருக்கிறார்.. டைட்டில்போடும்போது வான்வழியே பாரிஸ் நகரை சுட்டிருக்கும் அழகு மனதைகொள்ளை கொள்ளுகிறது.. வெளிநாடுகளை படமாக்கி இருக்கும் விதம் அருமை.. படத்தின் ரிச் லுக்குக்கு மிக முக்கிய காரணம் இவர்தான்.. ரொம்பவே நன்றாகசெய்திருக்கிறார்..

ஆண்டனி - எடிட்டிங் - மொத்தப் படமும் ரெண்டே மணி நேரம்தான்.. முதல் பாதிகொஞ்சம் இழுவை.. இரண்டாம் பாதி ஓகே..

பரத்வாஜ் - இசை - ஐம்பதாவது படமாம்.. கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுருக்கிறார்.. நிறைய காப்பி.. டோட்டடாயிங் பாட்டைத் தவிர எதுவும்தேறவில்லை.. பின்னணியில் பான்ட் இசையை போட்டுக் கொலையாய்க் கொல்லுகிறார்..

கதை - யூகி சேது - வில்லனில் செதுக்கியவர் இதில் சறுக்கி இருக்கிறார்.. நிறையவே பார்த்து சலித்துப் போன கதை.. வெளிநாட்டில் நடக்கும லோக்கல்வாரிசுப் பிரச்சினை - புதிதாக ஒன்றுமே இல்லை..

சரண் - திரைக்கதை, இயக்கம் - ஏன் சரண்? டான் கதை.. அதுக்கு ஸ்டைலானமுலாம் போட்டால் போதுமா? திரைக்கதையில் வேகம் வேண்டாமா? அஜித்என்ற மாஸ் நடிகர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றுஎண்ணியதன் விளைவா? சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் வழக்கமாகஉங்கள் படங்களில் இருக்கும்.. இதில் அப்படி எதுவுமே இல்லையே? நிறையவேஏமாற்றம்..

படத்தில் ரசித்த விஷயங்கள்
********************************


--> அஜித்தின் வெகு சாதரணமான இன்ட்ரோ.. ஸ்டைல்

--> பாவனா தன்னுடைய அப்பாவின் புத்தகத்தை அடிக்கடி திறந்து பார்க்கும் அழகு

--> அஜீத்துக்காக பாவனாவும் சமீராவும் உரசிக் கொள்ளும் காட்சி..

--> சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் விதம்..

--> உடை அலங்காரம்..

எரிச்சல்கள்
*************

--> சம்பத் மற்றும் பிரதீப் ராவத்..

--> அடிக்கடி எல்லோரும் தல தல என்றே புலம்பிக் கொண்டிருப்பது..

--> திரைக்கதை.. மெது மெதுவாக நகரும் காட்சிகள்..

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்றுசொல்லக் கூடியவன் கிடையாது. நல்ல படமாகத் தருவார் என்று நம்பும்என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

ரசிகன் - கார்த்திகைப் பாண்டியன்
இணையத்தளம் - ponniyinselvan-mkp.blogspot.com

கோவா


கோவாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்களில் யாரையாவது கரெக்ட் பண்ணி கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் அயல்நாட்டில் செட்டில் ஆகத் துடிக்கும் தமிழக குக்கிராமம் ஒன்றை சேர்ந்த மூன்று இளைஞர்களை பற்றிய கதைதான் கோவா!

ஆனால், இந்த மெயின் கதையை விட்டு விட்டு ‌கோவாவில் இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுப்பவர், அடைக்கலம் கொடுக்கும் அந்த ஆணின் ஆண் ஜேதடி நபர், அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவர்களால் அவர்களிடையே வரும் சந்தேகம் என கிளைக் கதைகளுக்கெல்லாம்., அதுவும் அருவறுக்கத்தக்க ஹோமோ செக்ஸ்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து மெயின் கதையை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பது கொடுமை!

கதைப்படி, வெளியூருக்கு போய் வந்தாலே வேறு பழக்கங்களை, நாகரீகங்களை ஊருக்குள் கொண்டு வந்து விடுவார்கள் எனும் பயத்தில் இளைஞர்கள் அடுத்த ஊருக்கு போகவே கட்டுப்பாடு வைத்திருக்கும் கிராமத்தில் பிறந்தவர்கள் வைபவ், ஜெய், பிரேம்ஜி அமரன் மூவரும். அதுவும் பிரேம்ஜி அந்த ஊர் கடவுள் அவதாரமாக, சாமி பிள்ளையாக எல்லோராலும் வணங்கப்படும் பிறப்பு. இருந்தாலும் இந்த மூவரும் நைட் ஷோ சினிமா, கூத்து, கும்மாளம் என அடிக்கடி ஊர் எல்லையை தாண்டி பஞ்சாயத்து முன் நிறுத்தப்படுவதும், சின்னதாக தண்டிக்கப்படுவதும் வாடிக்கை. இதனால் இந்த ஊரும் வேண்டாம், பஞ்சாயத்தும் வேண்டாம் என கிளம்பும் மூவரும் மதுரைக்கு கிளம்புகிறார்கள். அங்கு வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு அயல்நாட்டில் செட்டில் ஆகப்போகும் தங்கள் அட்டை கரி நண்பனை பார்த்ததும் ‌மூவருக்கும் கோவா போய், நண்பனை மாதிரி பாரின் ஜோடி தேடும் ஆசை உதயமாகிறது. அப்புறம்..? அப்புறமென்ன....? அடித்து பிடித்து சரக்கு லாரி ஏறி, கோவா போகும் மூவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையையும், துணையையும் தேடிப்பிடித்தார்களா, இல்லையா? என்பது மீதிக்கதை!

இப்படித் தெளிவான கதையில் புரியாத விஷயங்களை... புரி்ந்தும் புரியாமலும் இருக்க வேண்டிய (ஹோமோ செக்ஸ்) சமாச்சாரங்களையெல்லாம் புகுத்தி கோவாவா? ஹேமோவா? என கேட்க வைத்திருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு! நினைத்திருந்தார் தவிர்த்திருக்கலாம்!

ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் இவர்களது கோவா தோழர் அரவிந்த் ஆகாஷ் என நான்கு நாயகர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் என்றாலும் பிரேம்ஜி அடிக்கடி குளோஸ் அப்பில் வந்து நம்மை பயமுறுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.

சிநேகா, பியா, மிலானி, வில்லன் நடிகர் சம்பத் (ஆமாம் பின்னே...) என நான்கு கதாநாயகிகள். நால்வரும் நச்சென்று நடித்துள்ளனர். அதிலும் சிநேகா, பியாவை அந்த வெள்ளைக்கார மிலானி ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால், இவர்கள் மூவரையும் நடிகர் சம்பத் பீட் செய்து விடுகிறார். பேஷ்! பேஷ்!!

ஜெய், பியாவின் காதலைவிட பிரேம்ஜி - மிலானியின் காதல் உருக்கம் என்றால் வைபவ்- சிநேகாவின் காதல் கல்யாண உதறல்...!

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் கோவா பால்கோவா! யுவன் சங்கர்ராஜாவின் இசையில் ஒன்பது பாடல்கள் ஒன்றிரண்டு மனதில் பதிகிறது. ஒன்றிரண்டு ஓ.கே. எனு தாளம் போட வைக்கிறது.

‌கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என டைட்டிலில் கார்டு வரும் வெங்கட்பிரபுவிடம் கேட்க வேண்டும்... கோவாவில் கதை எங்கே இருக்கிறது என்று!

கோவாவின் சப்-டைட்டிலாக வரும் எ வெங்கட்பிரபு ஹாலிடே மாதிரியே படமும் கதை இல்லாத ஹாலிடே - ஜாலிடேவாக இருக்கிறது.

கோவா : டைரக்டருக்கும் அவரது டீமிற்கும் வேண்டுமானால் பால்கோவாவாக இருக்கலாம்...! நமக்கு?.

தினமலர் விமர்சனம்