Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

Tuesday, December 13, 2011

ஒய் திஸ் கொலைவெறி டி....



ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் “3″. இப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இச்சையமைப்பாலராக் அறிமுகமாகிறார்.

இப் படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில் சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். “வை திஸ் கொலைவெறி கொலைவெறி டி…” என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது……

“21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம்.

சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

சரி ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன். அதன் அடிப்படையில் என்னை இந்த படத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன்.

அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது. இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று.

இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்த பாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.

3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.

முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன. பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல..!

யோ பாய்ஸ் யாம் சிங்கிங் சாங்
சூப் சாங்
பலாப் சாங்
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ரிதம் கரெக்ட்
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
மைந்தின் திஸ்
ஒய் திஸ் கொலைவெறி டி

டிச்டன்சேல மூணு மூணு
மூணு கலரு வ்ஹிடு
வைட் பக்க்க்ரௌந்து நிக்ஹ்டு நிக்ஹ்டு
நிக்ஹ்டு கலரு பளக்கு

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

வைட் ச்கினு கிர்லு கிர்லு
கிர்லு ஹீர்டு பளக்கு
இயேசு இயேசு மீது மீது
மி புர்டுரே தரக்

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

மாமா நோட்ஸ் எடுத்துக்கோ
அப்டியே கைல ச்னக்க்ஸ் எடுத்துக்கோ
ப ப பாண் ப ப பாண் ப ப பா ப ப பாண்
சரியாய் வாசி
சூப்பர் மாமா ரெடி
ரெடி 1 2 3 4
வஹா வாட் எ சங்கே ஓவர் மாமா


ஓகே மாமா நொவ் துன் சங்கு

கைல கிளாஸ்
ஒன்லி இங்கிலீஷ்..

ஹந்து ல கிளாஸ்
கிளாஸ் ல ஸ்காட்ச்
எஎஸ் புல்லா திரு
எம்ப்டி லிபு
கிர்லு கொமெஉ
லைப் ரேவேர்சே கீறு
லோவ்வு லோவ்வு
ஒத் மி லோவ்வு
யு ஷோவேத் மீ பெவ்
காவு காவு ஹோலி காவு
இ வான்ட் உ ஹெஅர் நோவு
கோட் இம் டிங் நோவு
ஷி இஸ் ஹாப்பி ஹோவு

திஸ் சாங் போர் சூப் போயசு
வி டோன்ட் ஹவே சாய்ஸ்உ

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி..

நொவ் இன் இங்கிலீஷ்

yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain please
why this kolaveri..di

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english..

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song

---------------

Almost everyone can understand this song..
anyway here are the meaning for few words

Kolaveri - Killer rage or Murderous Rage.

"Soup Song" - Love failure Song
"Soup Boys" - Boys who failed in love

Thursday, October 6, 2011

யாரது யாரது யார் யாரது...

படம் : காவலன்
இசை : வித்யா ஷாகர்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடலாசிரியர் : யுக பாரதி
………………………….

ஹல்லோ

யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது யாரது யார் யாரது (யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யார் யாரது
===
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடர்வது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவில் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை
இதயம் தேடுதே
===
யாரது (யாரது) யாரது (யாரது)
ஹல்லோ
யாரது (யாரது) யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

நன்ன் நா…
===
உச்சன் தலை நடுவினில் அவளொரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என் உள்ளில் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குக்றாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இடும் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்
====
யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது (யாரது) யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

முன் அந்தி சாரல் நீ..

படம் : 7அம் அறிவு
பாடல் : முன் அந்தி சாரல் நீ..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஒ அழகே.. ஒ.. இமை அழகே..
ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே..
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
அடி உன்னை தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

காதல் என் காதல் அது கண்ணீருல..

படம் : மயக்கம் என்ன
பாடல் :
காதல் என் காதல்..
பாடியவர்கள் : தனுஷ் , செல்வராகவன்

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சேரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..
பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி போதும் மச்சான்..

அடிடா அவல.. ஒதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா..

படம் : 7அம் அறிவு
பாடல் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா
பாடியவர் : SPB

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..

என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

கண்ணாடி நீ கண்ஜாடை நான்


கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

துரம் இலமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

என் நண்பனே என்னை எய்த்தாய்


என் நண்பனே என்னை எய்த்தாய்.. ஒ..
என் பாவமாய் வந்து வாய்த்தாய்..
உன் போலவே நல்ல நடிகன்.. ஒ..
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..
நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ..
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி.. என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

வலைகையைப் பிடித்து வலைகயில் விழுந்தேன்..
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்..
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்..
இதுவா உந்தன் நியாயங்கள்..? என்னக்கேன் இந்த காயங்கள்..?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ..
முருகன் முகம் ஆறுதான்..
மனிதன் முகம் நூறுதான்..
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..

ஏன் நண்பனே.. என்னை எய்த்தாய்??

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..

அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறிவேன்..
அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்..
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்..
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி..
யம்மா யம்மா..
உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி..
காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ…
எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்..
நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : சொட்ட சொட்ட

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
கிட்ட தட்ட கரைய வைத்தாய்..
கிட்டாமல் அலைய வைத்தாய்..
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்..
ரயில் வரும் பாலமாய் அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க..

நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே..
விழிப்பார்கும்போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே..
அட இனி என்ன நடக்கும்.. மனம் நடந்ததை நடிக்கும்..
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே..
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே..
பார்க்குதே.. பார்க்குதே.. தோற்குதே..

அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம், ரொம்ப பிடிக்குது என்னக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே..
கொண்டதே.. கொண்டதே.. வென்றதே..

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..

மாசமா.. ஆறு மாசமா..

படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : மாசமா.. ஆறு மாசமா.

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..

ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல..
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல..
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல..
பாத்து எல்லாம் தொலவுல..
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல..
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல..
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல..
நின்நாளோ பாத்தாளோ தெருவுல..
நா பாக்காம போனேனே முதலுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..

நும்பரும் வாங்கல.. போனும் பன்னால..
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல..
Følløw பண்ணல தூது அனுப்பல..
எப்படி வந்தா நேரில..
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல..
வழி மறிக்கல.. கையப்பிடிகல..
எப்படி விழுந்தா காதல்ல..
அவ மூச்சாகி போனாளே உயிருல..
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்..
நா காதலிச்சேன்..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
மோசமா மோசமா காதலிச்சேன்..

கோவிந்தா கோவிந்தா..

படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : கோவிந்தா கோவிந்தா
இசை : சத்யா
பாடலாசிரியர்: முத்துக்குமார்

கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
டாடி மம்மி என்ன பேறு இவளுக்கு வச்சாங்க..
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க..

கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல.. கூட வந்து ஓட்டிகிட்ட தொல்ல..
கழட்டி விடவும் மனசே இல்ல.. என்ன கொடுமையடா..
காஞ்சு போன மொளகா உள்ள, கொட்டிக் கிடக்கும் விதையப்போல..
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா..
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்..
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ..
வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்..
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ..

அடடா டாடி மம்மி என்ன பேறு இவனுக்கு வெச்சாங்க..
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேறு வப்பேங்க..

கப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒன்னும் புரியலயே..
ட்ரைலர் போல முடிந்திடுவாலோ.. ட்ரைன போல நீண்டிடுவாலோ..
எப்ப இவன இவ விடுவாளோ.. ஒன்னும் தெரியலயே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே..
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாலே..
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா..
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்..

கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..

Friday, August 26, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி...

படம் : ஆளவந்தான்
பாடல் : கடவுள் பாதி
இசை : ஷங்கர்-எசன்-லாய்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கமலஹாசன்

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தகுமரா,
நந்தகுமரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஃஅ!

நந்தகுமரா…

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,

மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,

நந்தா!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,

காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!

ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,

எல்லாம் துளியில்,
குளுரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?

கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?

சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,

கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…
ஏய்!

புதிய வானம்… புதிய பூமி…


புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது …
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
என்று ஆசை துளிர்க்கிறது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு..


பாடல் : பச்சை மரம் ஒன்று
திரைப் படம் : ராமு
பாடியவர்கள் : பி . சுசிலா - பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை : எம் .எஸ் .வி
வரிகள் : கண்ணதாசன்
நடிப்பு : ஜெமினி , கே .ஆர் .விஜயா

பச்சை மரம் ஒன்று இ
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை
நியல்லவோ
கட்டித் தங்கம் என்று
கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ

ஸ்ரீநிவாஸ் : ஆசைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
சைக் கிளி அங்கே
மைக் கிளி இங்கே
தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே
உன்னை எண்ணி வாழும் கலங்காதே

பச்சை மரம் ஒன்று
ச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

தூங்காத கண்ணென்று ஒன்று

படம் : குங்குமம்
பாடகர்கள் : சௌந்தராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை :
Kvm
நடிப்பு : சிவாஜி , சாரதா

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நம் காணும் உலகென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

பாடல் : ஆலயமணியின் ஓசையை
திரைப் படம் : பாலும் பழமும்
பாடியவர் : பி .சுசிலா
இசை : எம் .எஸ் .வி - தி .கே .ஆர்
வரிகள் : கண்ணதாசன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

இலகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான் ...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே ...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்..


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

விழிகளில் ஒரு வானவில்..


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..

உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மழங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காக பேசினேன்..
யார் என்னக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்
பென்னாகிரேன் இங்கே..
தயகன்களால் திணறுகிறேன்..
நிலென்று சொன்னபோதிலும்
நிலாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..


Friday, August 5, 2011

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்


திரைப்படம்- பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


நிலவும் மாலை பொழுதினிலேஎன் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

அவள் பறந்து போனாளே...


திரைப்படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர்: ஏ.எல்.ராகவன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி


எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…


ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க