Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, October 10, 2011

திருவண்ணாமலை கிரிவலம்


நினைத்தாலே முக்தி தரும்' என்ற பெருமையுடன் திருவண்ணாமலை ஒரு மிகச் சிறந்த ஆன்மீக திருத்தலமாக விளங்குகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. சமீபகாலத்தில் இந்த யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உயர்ந்து உள்ளது. முன்பு மலைகளில் வனங்கள், குகைகள் இருந்தன. அதில் பல சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்து மகான்களின் ஆசிகளைப் பெற்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.

ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

Thiruvannamalai

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

திருவண்ணாமலையின் சிறப்பு

இங்குள்ள மலையில் அனேக சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் வாசம் செய்துள்ளனர். அவர்களுள் வேதாந்த மகரிஷி ரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மற்றும் யோகிராம் சுரத்குமார் ஆகியோர் 19 & 20ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் வாழ்ந்து மறைந்தவர்களாவர். இன்றும் இங்கு அனேக சித்தர்கள் உருவகமாகவும் அருவகமாகவும் வாழ்ந்து வருவதாக சொல்கின்றனர்.

தல புராணம்

ஒருமுறை இவ்வுலக ஜீவராசிகளை படைக்கும் தொழிலை மேற்கொண்டவராகிய பிரம்மனுக்கு மும்மூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) தானே உயர்ந்தவர் என்கிற கர்வம் தோன்றியது. நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன் என்று கூற, அதை ஏற்க மறுக்கிறார் விஷ்ணு. அப்போது அங்கே ஒளிப்பிழம்பாய் ஜீவஜோதியாய் அந்த சர்வேஸ்வரனே காட்சி தருகிறார். இதைக் கண்ட விஷ்ணுவும், பிரம்மாவும் அந்த ஜோதியின் ஆதியையும் (ஆரம்பம்) அந்தத்தையும் (முடிவு) காண்பவர்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு போட்டியை ஆரம்பிக்கின்றனர்.

ஜோதியின் அந்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் மேல்நோக்கி செல்கிறார், அதேபோல் ஆதியை காண்பதற்கு வராக உருவம் கொண்டு பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார் விஷ்ணு. இவர்களது செயலைக் கண்ட சர்வேஸ்வரர் தன் அடியையும் (கால்பாதம்) உச்சியையும் (தலைமுடி) இவர்கள் காணாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் கீழும் வளர்ந்து கொண்டே செல்கிறார்.

பல ஆண்டுகள் ஆகியும் ஆதியையும் அந்தத்தையும் இருவராலும் காண முடியவில்லை. அப்போது அந்த சர்வேஸ்வரனின் தலையில் இருந்து தாழம்பூ பல ஆண்டுகள் பயணித்து கீழே வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த பிரம்மன் இந்த ஜோதி வடிவத்தில் இருப்பவர் சிவனே என்பதைப் புரிந்து கொள்கிறார். பிரம்மன் தான் மேற்கொள்ளும் பயணம் பற்றி தாழம்பூவிடம் கேட்க, நீங்கள் எத்தனை யுகங்கள் முயற்சி செய்து மேலே சென்றாலும் அந்த சர்வேஸ்வரனின் முடியை காண முடியாது என்றது தாழம்பூ. ஆகவே பிரம்மன் ஒரு முடிவெடுத்து தான் சிவனின் முடியைக் கண்டதாக சாட்சியம் சொல்லவேண்டும் என்றும் அதற்காக உனக்கு அடுத்த பிறவியை நல்விதமாக படைக்கிறேன் என்றும் தாழம்பூவிடம் கூறினார். முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென ஒத்துக்கொண்டது தாழம்பூ.

Lord shivaபிரம்மன் தன் பயணத்தை முடித்துக் கொண்டவுடன் சிவனும் தான் வளர்வதை நிறுத்துகிறார். அப்போது விஷ்ணு சிவனின் அடியைக் கண்டு தொட்டு வணங்க, சிவன் விஷ்ணுவைத் தூக்கி ‘நானும்(ஈசன்), நீயும்(திருமால்) ஹரிஹரனே(ஒன்றே)' என்றவாறு விஷ்ணுவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பிரம்மன் தான் சர்வேஸ்வரனின் முடியைக் கண்டதாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்று சொல்ல, தாழம்பூவும், ‘ஆம்' என்று சாட்சி சொல்லிற்று. ‘நான்' என்ற அகங்காரம் கொண்டு என்னுடைய முடியைக் காணாமல் கண்டேன் என்று உரைத்ததால் உனக்கு (பிரம்மாவுக்கு) இந்த பூலோகத்தில் கோவில், பூஜைகள் இருக்காது என்று கூறிவிட்டார் சிவன். அதற்கு பொய் சாட்சியம் சொன்னதற்காக தாழம்பூவை யாரும் பூஜைக்காக பயன்படுத்தமாட்டார்கள் எனவும், தாழம்பூவில் பூ நாகம் என்ற விஷப்பாம்பு குடிகொள்ளும் என்றும் தாழம்பூவிற்கு சாபமிட்டார் சிவன்.

எனவேதான், பிரம்மாவிற்கு என்று இப்புவியில் கோவில்கள் இல்லாமல் போயிற்று. மேலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவையும் இப்புவியில் யாரும் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அந்த சிவன் ஜீவஜோதியாய் காட்சி தந்த மலையே திருவண்ணாமலை ஆயிற்று.

கிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்

இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

அருள் தரும் அமாவாசை

இறைவனாகிய சிவன் தேவர்களுக்காக விஷம் உட்கொண்ட நாள் அமாவாசையாகும். தேவர்கள் என்றும் இளமையுடனும், அறிவாற்றலுடனும், திடகாத்திரமான உடலுடனும் வாழ்வதற்கு இறைவன் அளித்த வரமே திருபாற்கடலில் உள்ள அமுதமாகும். அந்த அமுதத்தை எடுக்க வேண்டி தேவர்கள் மலைகளையும் ஆதிசேசன் பாம்பையும் பயன்படுத்தினர். அப்போது ஆதிசேசனின் விஷத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் அழிந்ததோடு அமுதத்தில் விஷமும் கலந்துவிட்டது. தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க அந்த சர்வேஸ்வரனே திருவோடேந்தி விஷத்தை பருகுகிறார். அதனால் அவர் மேனி நீலநிறமாக மாறுகிறது. அந்த நேரத்தில் சர்வேஸ்வரனைக் காண மூவுலகிலும் உள்ள தேவர்களும், இப்பூவுலகில் இருந்த அனைத்து சித்தர்களும், யோகிகளும் ஒன்று கூடிய நாளே அமாவாசை. ஆகவே அமாவாசை தினத்தில் கிரிவலம் வருவதால் சித்தர்கள், யோகிகள், மூவுலக தேவர்கள் மற்றும் அந்த சர்வேஸ்வரனின் அருளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொருள் தரும் பெளர்ணமி

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு இராஜகோபுர வாயிலில் இருந்துதான் பெரும்பான்மையானோர் கிரிவலப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

கிரிவலப் பயணம்

கிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன.

பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும்.

அடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன.

அடுத்த அரை கிலோமீட்டரில் சாலையின் வலது பக்கத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் பரந்து விரிந்ததாக இருக்கிறது. ஆசிரமத்திலிருக்கும் ஒரு ஆலமரத்தில் திருமணம் நடைபெறுவதற்காக வேண்டிக்கொண்டு தாலிக்கொடிகளும், நாணயங்கள் அடங்கிய துணிகளையும் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இலவச அன்னதான மண்டபமும் உள்ளே அமைத்திருக்கின்றனர்.

வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன.

மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.

கடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது.

அதைத் தொடந்து வலதுபுறத்தில் ஆதிபராசக்தி சக்தி பீடம் இருக்கிறது. அடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது.

அடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது. அடுத்து வலது புறத்தில் நித்தியானந்தரின் தியான பீடம் இருக்கிறது. இதுவே அவரின் ஆசிரமுமாக செயல்படுகிறது. நுழைவாயிலில் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிதண்ணீர் குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றால் நித்தியானந்தரின் தியான சத்சங்க வீடியோ காட்சிகளை பெரிய திரையில் வெட்ட வெளியில் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.

அடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன.

அடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன.

அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம்.

அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.
கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.

கோவிலின் மாதிரி வடிவம்

Kovil model

கோவிலின் உள்புறத் தோற்றம்:

Kovil inside

கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை :

1.அமாவாசை அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம்.

2.பெளர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும்.

3.கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது உத்தமம். அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.

4.கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது.

5.முக்கியமாக, அமாவாசை-பெளர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும் திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

6.கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம்.

7.கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

8.கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம்.

9.பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலை கிடைக்கப் பெறலாம்.

அமைவிடம், செல்லும் வழி

திருவண்ணாமலை கோவில் விழுப்புரத்திற்கும் காட்பாடிக்கும் இடையில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து 90 கிலோ மீட்டரிலும் மற்றும் சென்னையிலிருந்து 185 கிலோ மீட்டரிலும் உள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி அடிக்கடி உள்ளது. ஆனால் ரயில் தடம் இந்தப் பகுதியில் இல்லை. ஆகவே, தென் தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி பேருந்தில் செல்லலாம். மேலும், சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், வேலூர் மற்றும் போலுரில் இருந்தும் பேருந்து வசதி தாராளமாக உள்ளது. பெளர்ணமி நாளில் மட்டும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு தங்குவதாக இருந்தால் கோவிலுக்குச் சொந்தமான விடுதிகளில் வசதிக்கேற்ப 50 ரூபாயிலிருந்து 200 ரூபாய் அளவு வரை தனி ரூம் பிடித்து தங்கிக் கொள்ளலாம். கோவிலுக்கு அருகிலும், சுற்றிலும் தனியார் விடுதிகளும் நிறைய உள்ளன.

இம்மலையில் பல ஜீவ ஆத்மாக்கள் அடங்கியுள்ளன. அவர்களை வலம் வருவது கோரிக்கைகள் நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும், நல்ல பலன்களை அடைவதற்கும் ஒரு வழியாகும். ஜீவ காருண்ய மனதுடன் வலம் வந்தால் தனி நபர் சுபிட்சம் மட்டும் அல்லாது உலக சுபிட்சம் ஏற்படவும் வழி பிறக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


நன்றி - nilacharal

திருண்ணாமலை திருக்கோயில்




அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்




மூலவர்:அருணாச்சலேசுவரர், அண்ணாமலையார்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம்: மகிழமரம்
தீர்த்தம்:பிரம்மதீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை :காரண, காமீகம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருண்ணாமலை
ஊர்:திருவண்ணாமலை
மாவட்டம்: திருவண்ணாமலை
மாநிலம்: தமிழ்நாடு




திருவிழா
:


கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்
.

தல சிறப்பு:

*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.


திறக்கும் நேரம்:

காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்

அண்ணாமலை பெயர்க் காரணம் :

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.


பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.

குறிப்பாக மனை அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.


நேர்த்திக்கடன்:

அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள் தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

ஒருநாள் மட்டும் தரிசனம்:

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா
இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
பெருமாளும் ஜோதி வடிவில்!

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி
இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்துர விநாயகர்:
ஆஞ்சநேயருக்கு செந்துõரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்துõரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்துõரம் சாத்தும் வைபவம் நடக்கும்.
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை
மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!

கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு துõணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார்' (கம்பம் துõண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

ஆணவம் அடக்கும் பைரவர்:
இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நான்கு முகத்துடன் லிங்கம்:
பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்:
மகான் ரமணருக்கு மரணம்
பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்

அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். "கிளி கோபுரம்' என்றே இதற்கு பெயர்.

அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை "அருணகிரி யோகேசர்' என்கிறார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
விஞ்ஞானம் அடிப்படையில்:
நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.

Saturday, July 3, 2010

சதுரகிரி மலை....III

இதர தெய்வங்கள்

தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்ம‎ன், பேச்சியம்ம‎ன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.

கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா எ‎ன்றழைக்கப்படுகிறது.

அத்திரி மகரிஷி தங்கியிருந்த ‏இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் எ‎ன்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. வன துர்கா (வன காளி)வுக்கும் ஒரு சிலை உள்ளது.

பிலாவடி கருப்பசாமி எ‎ன்னும் கோவிலும் மேலே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சிறிது தொலைவுக்கு மு‎ன் உள்ளது.

தாணிப்பாறைக்குச் செல்லும் மு‎ன்னே தம்பிபட்டி என்னும் ஊரி‎ன் அருகில் மாவூத்து எ‎ன்ற இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சதுரகிரிக்குச் செல்லும்மு‎ன் இங்கே தான் சிவன் இருந்ததாக ஐதீகம்.


விசேஷங்கள்


சதுரகிரியில் அமாவாசை நாள்தா‎ன் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசைய‎ன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசைய‎ன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.

தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.

அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்த‎ன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்கள‎‎ன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.

எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை முத்தரும்‎முத்தரும் முத்தரு
, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நா‎ன்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.

அதிகாலை மூ‎ன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த க‎ன்னியர் வனத்திற்குள் செ‎ன்று விடுவர் எ‎ன்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.


மை தூக்கிகள்

இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தா‎ன் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகி‎ன்றனர்.
நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகி‎ன்றனர்.

மூலிகை வ‎னம்

இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கி‎ன்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.

சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயி‎னர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.

இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மா‎ன், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்ப‎ன்றி போ‎ன்ற அனைத்து விலங்குகளும் உண்டு.கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது.

மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!

மலைகளி‎ன் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுட‎ன் ‎நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர்.

சுனைநீர் எ‎ன்பதால் குடிநீர் தித்திப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெளிவாகவும் ‏ இருக்கும்.

உணவு வசதிகள்

இங்கு மூன்று, நா‎ன்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அ‎ன்னதானம் வழங்கப்படுகிறது. சுவையான சாப்பாடாக இருக்கும்.

கவனிக்கவும்.. உப்பு, புளியிலிரு‎ந்து, காய்கறி, மசால், அரிசி எ‎ன்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதா‎ன் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தா‎ன் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும். ஆதலால், சாப்பிடும்போது சிறிது குறையிருந்தாலும் பொருட்படுத்தாமலிருப்பது நலம். குறை பெரும்பாலும் ‏இருக்காது எ‎ன்பது வேறு விஷயம்.



காலையிலிருந்து மாலை வரை அ‎ன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் ஆயிரக்க‎ணக்கான பக்தர்களுக்கும் ஆக்கி, வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் த‎ன்னார்வலர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அங்குள்ள மடத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மனமுவந்து கடவுள் சேவையாக எண்ணிச் செய்கி‎‎ன்றனர். நடு‏ இரவு ப‎னிரெண்டு மணிக்குச் செ‎ன்றால்கூட வரவேற்று, ‏இருக்கும் உணவை இன்முகத்துட‎ன் வழங்குகி‎‎ன்ற‎னர்.


சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறே‎ன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவ‎னம்...


செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் ச‎ற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த ‏இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.

வனத்தினுள் செல்ல வேண்டும் எ‎ன்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுட‎ன் செல்லவும்.

செல்லும் வழி

தாணிப்பாறைக்குச் செல்ல பி‎ன்வரும் வழிகளுண்டு.

மதுரையிலிரு‎ந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.‏மீ)
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ண‎ன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ண‎ன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)

இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தே‎னி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையி‎ன் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதா‎ன்.

விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் ‏தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேம்ந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் ‏ இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!

இரவில் பெரும்பாலும் மலையில் ஏற வேண்டாம். அவ்வாறு ஏறினாலும் டார்ச் போ‎ன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.

முற்றும்

Thursday, July 1, 2010

சதுரகிரி மலை....II

பயணம்

தாணிப்பாறையி‎ன் அடிவாரத்தில் வனத்துறையினரி‎‎ன் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமு‎ன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. ‏இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.


சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொ‎ண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தா‎ன் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அட‎ர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தா‎ன் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.

அடிக்கடி செ‎ன்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் செ‎ன்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நா‎ன்கு மணிநேரம் ஆகிவிடும்!

ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸெ‎ன்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் எ‎ன்று சொல்லும்!. மேலே ஏற ஏற த‎ன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.

பழக்கப்பட்ட ஆட்களுட‎ன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் செ‎ன்றடைந்தவுட‎ன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.

இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. எ‎ன்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோ‎‎ன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமெ‎ன்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதா‎ன் மூச்சிறைப்பது போல இருந்தாலும்
கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதா‎ன்.

சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே ம‎ணிநேரம்தா‎ன்.

ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒ‎ன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூ‎ன்று மணி‎ நேரம். வீட்டுக்கு வந்தவுட‎ன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூ‎‎ன்று நாட்களில் சரியாகிவிடும்!

முடிந்தவரை அதிக பாரங்கள் கொ‎ண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.


சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.

சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!

போ‎ன்ற கோஷங்கள் பிரசித்தம்.


பரமாத்மாவி‎ன் இருப்பிடம்


மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவ‎ன்.

ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

சுந்தர மகாலிங்கத்தைத்தா‎ன் முதலில் தரிசிக்கின்றனர். அத‎ன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கி‎ன்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.

சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் எ‎ன்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.

சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.

இவற்றுக்கும் மேலே செ‎ன்றால் பெரிய மகாலிங்கம் எ‎ன்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒ‎ன்றும் அருகில் உள்ளது.

சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை எ‎ன்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் செ‎ன்ற அனுபவஸ்தர்களுட‎ன் மட்டுமே செல்லவேண்டும். ஏ‎னெ‎ன்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏ‎ன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தா‎ன்.

தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!

குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே செ‎ன்று அமர முடியும். அதற்கப்பால் வெறும‎னே கற்சுவர்தா‎ன். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகி‎றது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.

பொதுவாக மற்றொரு நம்பிக்கை எ‎ன்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் எ‎ன்பதுதான். இப்படியரு அரிய காட்சியைக் கண்டதாக மிஸ்டிக் செல்வம் எ‎ன்பவர் ஜோதிடபூமி என்னும் இதழில் எழுதியிருக்கிறார்.

ஜடாமுடி தரித்த, நெடுநெடுவென வளர்ந்து சுமார் ஏழரை அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய், கண்களில் செம்மை ஒளிர அச்சுறுத்தும் தோற்றத்துட‎ன் மூ‎ன்று சித்தர்களைக் கண்டதாக அவர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது சித்தர்களி‎ன் மாயத் தோற்றமாகக் கூட ‏ ‏ இருக்கலாம்.

சித்தர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தரிசனம் காட்டலாம். இரவு பூஜை நேரங்களில் சில வேளைகளில் சட்டநாதர் இராஜநாகமாகவும், உடும்பாகவும் மாறி தோ‎‎‎ன்றுவதுண்டாம்.

பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில்‏ இரவில் மலையில் தங்கியிருந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். இக்காட்சி யார் கண்ணுக்குக் கிடைக்கவேண்டுமெ‎ன்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும் பாக்கியவா‎ன்கள் மட்டுமே ‏இப்பேறு பெற்றவர்கள் என்கிறார்கள்.

(தொடரும்)
.....

Wednesday, June 30, 2010

சதுரகிரி மலை


துரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

Sathuragiri

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

அமைவிடம்

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

Sathuragiriதெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும்.

‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை.

சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது.
தல புராணம்

கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர்.

பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு.

பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா.

உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகி‎ன்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் த‎ன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவ‎ன்.

இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே எ‎‎‎ன்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று.

சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, த‎ன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊ‎ன்றுகோலை எடுத்து சிவ‎ன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார்.

த‎ன்னை சிவனுட‎ன் இணைத்துக் கொண்டால் மட்டுமே த‎ன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் எ‎ன எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் த‎‎ன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார்.

பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது.

அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியி‎ன் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளி‎ன் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம்.

தெய்வத்தி‎ன் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவி‎யின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.

பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார்.

மனமுருகிய சிவ‎ன் தேவியி‎ன் தவத்தினை மெச்சி, த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார்.

சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமெ‎ன்று ஆணையிட்டார்.

இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் த‎ன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வி‎ன் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக த‎ன்னுடன் இணைவார்கள் எ‎ன்றும் அறிவித்தார்.

அத‎ன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா த‎ன்னுடன் இணைந்த தேவியுட‎ன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார்.

பி‎ன்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பி‎ன் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு.

(தொடரும்).....