Thursday, April 7, 2011

அழகான பற்கள் வேண்டுமா?


பல் பராமரிப்பை பற்றி அவ்வப்போது மருத்துவ உலகம் பல்வேறு மருத்துவ குறிப்புகளை வாரிவழங்கி வருகிறது. பல் நன்றாக தேய்க்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றாக, அதிகமாக தேய்த்தால் பல் எனாமல் போய்விடும் என்ற கருத்து உருவானது.

இது தவிர விளம்பங்களில் வர்ணிக்கப்படும் பற்பசை, பிரஷ் போன்றவற்றின்சிறப்பு பெருமைகளை பல் மருத்துவ நிபுணர்கள் உண்மைக்கு புறம்பானவைஎன்கின்றனர்.

அனைத்து தரப்பிலும் விரிவாக ஆராய்ந்து பல் மருத்துவ நிபுணர்கள் பல்பராமரிப்புக்குதந்துள்ள பட்டியல்.

6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பல் மருத்துவமனையில் சுத்தம் செய்யவேண்டும்.

மென்மையான பிரஷ்ஷை கொண்டு பற்களை மெதுவாக சுத்தம் செய்யவேண்டும்.

புளோரைடு கலந்த பற்பசைகளை உபயோகித்து பற்குழி ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்.

நமக்கும், பல்லுக்கும் தேவைப்படும் ப்ளோரைடின் அளவை நிர்ணயிக்கதேர்ந்தெடுக்கப்பட்ட பல் மருத்துவ நிபுணரை நாடவும். ஏனெனில் ப்ளோரைடுஎன்பது அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படுத்தும் ஒருவேதிப்பொருளாகும்.

பிரஷை 45 டிகிரி சாய்வாக பயன்படுத்த வேண்டும். எந்தவொரு உணவைசாப்பிட்டாலும் அல்லது பானங்களை குடித்தாலும் வாய் நன்றாககொப்பளிப்பதை வழக்கமாக கொள்ளவும்.

சாதரண டூத் பிரஷினால் வாயின் உட்பகுதிகளை சுத்தம் செய்ய இயலாத நிலைஇருக்குமாயின், பல்மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதற்கெனமருந்து கடைகளில் உள்ள எளிய, சிறப்பு கருவிகளை வாங்கி உபயோகிக்கவேண்டும்.

நார்ச்சத்து மிகுந்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது பல்லிற்கு நலம்அளிக்கும்.

பல், ஈறு சம்மந்தமான எந்தவொரு இடையூறுக்கும் நேரடியாக மருந்துகடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவநிபுணரிடம் சென்று ஆலோசனை படி நடப்பது நல்லது.

இரத்த சோகையா?

இரத்த சோகை என்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள்.
ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.
தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட்கொள்ளக் கூடாது.
காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால்
இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹுமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

இரத்த சோகைக்கான அறிகுறி:

* நெஞ்சு வலி
* குறைந்த இரத்த அழுத்தம்
* சோர்வு
* பலவீனம்
* விழுங்குவதில் சிரமம்
* மூச்சு திணறல்
* அதிகப்படியான இதயத் துடிப்பு

Wednesday, April 6, 2011

பாப்க்கார்ன் வால் பேப்பர்



தேவையான பொருட்கள்: வெளிர் நீல நிற சார்ட் பேப்பர், பச்சை மற்றும் ப்ரவுன் நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் பென் பசை, ஒரு கப் பாப்க்கார்ன்.

செய்முறை:
1 நீலநிற சார்ட் பேப்பரில் ப்ரவுன் வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் தண்டு மற்றும் கிளையை
வரையவும்.
1 பச்சை நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் இலையை வரையவும்.
1 இப்போது பாப்க்கார்னை இலைகளின் இடையே "பூ' போன்று பசைக் கொண்டு ஒட்டவும்.
1 இப்ப பாப்க்கார்ன் வால் பேப்பர் ரெடி. இதை உங்க வீட்டு சுவரில் மாட்டி அழகு படுத்துங்கள்!

தெரிந்து கொள்வோம்-I

* சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
ரேய்ட்டர்.

* சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.

* கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.

* கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.

* ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

* மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
கிழாநெல்லி.

* வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.

* உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.

* இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரியகாந்தி எண்ணெய்.

* தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
ஆக்ஸிஜன்.

கொடுரமான நச்சுத் தாவரம்




அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு
கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

உலகிலேயே பெரியது அதில் சில


உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி. உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும்.
இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது.

இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.

1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை.
இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும். உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

கடுங்காப்பி-பிளாக் டீ

Picture
புதினா டீ

வழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி

குடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும். புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

கிரீன் டீ

கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

பிளாக் டீ

சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான் பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.

கொத்தமல்லி காஃபி

ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள் சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.

விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு, பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.
Picture
கடுங்காப்பி

கிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!

ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம் சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.

வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம். காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும் தலைவலிக்கு நல்ல மருந்து தான். போதுமா காஃபி, டீ வகைகள்? அடுத்த கட்டத்திற்கு போகலாமா? அவசரம் வேண்டாம்.