திரைபடம்: அம்மர்கலம்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு : 1999
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்
Wednesday, July 28, 2010
Tuesday, July 27, 2010
சீரகம்

சீரகம்
இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில்வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டுமோர் குடித்து வந்தால் மார்பு வல நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும்.மயக்கத்தைப் போக்கி விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும்.
சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். "நீஇதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக" என்று அவர்கள்கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்துசீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.
நன்றி - தினகரன்.
Monday, July 26, 2010
பொய் சொல்ல கூடாது காதலி...
திரைப்படம்: ரன்
இயற்றியவர் : அறிவுமதி
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் : ஹரிஹரன்
வெளியான ஆண்டு : 2002
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத்தொண்டி
பதியம் போட்டு கொண்டேதான்
கண்டவுடன் எனையே , தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே ,
ரெக்கை கட்டி வா நிலவே !
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நேற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே ,
வெட்கம் விட்டு வா வெளியே !
நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் ,
சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் .
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
இயற்றியவர் : அறிவுமதி
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் : ஹரிஹரன்
வெளியான ஆண்டு : 2002
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத்தொண்டி
பதியம் போட்டு கொண்டேதான்
கண்டவுடன் எனையே , தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே ,
ரெக்கை கட்டி வா நிலவே !
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நேற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே ,
வெட்கம் விட்டு வா வெளியே !
நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் ,
சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் .
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண் பேசும் வார்த்தைகள்...
திரைப்படம்: 7- ஜி ரேயின்போ காலணி
இயற்றியவர் : ந. முத்துக்குமார்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : கார்திக்
வெளியான ஆண்டு : 2004
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை -
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
யே கண் பேசும் வார்த்தை .......
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை...
Thursday, July 22, 2010
வெள்ளாட்டுப் பால்
வெள்ளாட்டுப் பால்
வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள்.
ஈரமான ரோஜாவே என்னை....
திரைப்படம் : இளமைக்காலங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள் : கே ஜே ஏசுதாஸ் பி சுசிலா
பாடலாசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1983
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே... ஏ...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை... என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
Wednesday, July 21, 2010
அத்திக்காய்
அத்திக்காய்
அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் அயச் சத்து அதிகமாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)