Wednesday, June 15, 2011

தரை மேல் பிறக்க வைத்தான்.....


படம் : படகோட்டி
இசை : M.s.v
பாடல் : வாலி
பாடியவர் : T.m.s

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்


கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கண் போன போக்கிலே கால் போகலாமா...


படம் : பணம் படைத்தவன்
பாடியவர் : T.m.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : M .s . விஸ்வநாதன்.

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா


நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா


பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

Wednesday, June 8, 2011

ஜோக்ஸ்!

புத்தியுள்ள மனிதனெல்லாம்....

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..


பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..


கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்.

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

Friday, June 3, 2011

உணவை தவிர்க்க வேண்டாம்




உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

காலை:
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள்.

மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்: மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது.

எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு: இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

(நிலா முற்றம்)

மயக்கமா கலக்கமா....


மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை....

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு....

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

ஹெல்த் டிப்ஸ்


குறுமிளகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறுமிளகு நமது உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உண்டாக்குகிறது. குறுமிளகையும் உப்பையும் பொரித்து சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்துவிடும்.

தினமும் இரண்டு அகத்தி இலையை விழுங்கி வந்தால் வயிற்றில் உண்டாகும் புண்களை உடனே குணப்படுத்தும்.

மாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு வலுப்பெறும். குரல் வளம் நன்றாக இருக்கும். இதனுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.

-தேனி முருகேசன்

கார உணவு சாப்பிடவேண்டும்

உணவைப் பொதுவாக இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை கார உணவு, அமில உணவு. உடல் வளர்ச்சிக்கு கார உணவு 80 சதம் தேவை. அமில உணவு 20 சதம் தேவை.

துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு ஆகிய சுவைகளில் அமிலம் அதிகம். உப்பு, கசப்பு, காரசுவை உணவுகளில் காரம் அதிகமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கார உணவே அதிகமாக இடம் பெறவேண்டும். அமில உணவுகள் அதிகரித்தால் அந்த அளவுக்கு உடலில் நோயும் அதிகமாகும். அதற்காக அதிகமாகவும் காரம் சேர்க்கக்கூடாது.

- தேனிமுருகேசன்

குமுதம்