Friday, June 3, 2011
பழமொழியும் அதன் பொருளும்
1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.
அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.
2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்
உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.
3. இன்று விருந்து நாளை உபவாசம்
இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.
4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு
கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய்.
மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.
6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.
எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது.
7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே.
பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.
8. வாழை வாழ வைக்கும்:
வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.
9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை:
உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.
10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.
11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு
உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.
12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்:
திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது.
13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு:
பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.
14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை.
கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு.
நன்றி குமுதம்
Thursday, June 2, 2011
சிறு குறிப்புகள்
பழைய பிளாஸ்டிக் ஸ்கிரீன்கள், மேஜை விரிப்புகளை தூக்கி எறியாதீர்கள். அவற்றை சரியான அளவில் வெட்டி, ஃபிரிட்ஜில் ஊறுகாய், ஜாம் பாட்டில்கள் வைக்கும் இடத்தின் கீழே விரித்து வைத்தால் கறை படியாது. அவ்வப்போது, இந்த பிளாஸ்டிக் துணிகளை மட்டும் எடுத்துக் கழுவி மீண்டும் விரித்து வைக்கலாம்.
- ஆர்.நிர்மலா, கோவை-38
மைதா மாவு, பிரெட்தூள் இல்லாமல் சுலபமாக கட்லெட் செய்ய ஒரு வழி இருக்கிறது. காய்கறி கலவையில் சிறிது கடலை மாவைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, இந்தக் கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, கெட்டியானதும், எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்துங்கள். பிறகு விரும்பிய வடிவில் வெட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுங்கள். கட்லெட் ரெடி.
- நிர்மலா சாமிநாதன், வேலூர்
சமையல் செய்யும்போது துருவிய தேங்காய் மீந்துவிட்டால், அதனுடன் அரை டீஸ்பூன் (ஒரு கப் தேங்காய்த் துருவலுக்கு) உப்புத்தூளை சேர்த்துப் பிசிறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, மூடி வைத்து விடுங்கள். ஃபிரிட்ஜில் வைக்காமலேயே, மூன்று நாட்கள் வரை தேங்காய் கெடாமல் இருக்கும்.
- மீனா ரங்கநாதன், சென்னை-33
வீட்டிலுள்ள குளிர் சாதனப் பெட்டி, 'மைக்ரோ வேவ் அவன்', மிக்ஸி போன்றவற்றை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா. டூத் பேஸ்ட்டை சிறிது எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பாஞ்சை நனைத்துப் பிழிந்து, பொருட்களைத் துடைத்து விட்டு, கடைசியில் உலர்ந்த துணியால் துடைத்து விட்டால் போதும். பொருட்கள் பளிச்சிடும்.
- எம்.மைமுனா, சென்னை-43
சமையல் அறை, பூஜை அறையில் எண்ணெய் ஊற்றி வைக்கும் தூக்கு, பாட்டில்களில் கையில் எடுக்க முடியாத அளவுக்கு பிசுக்கு ஏறி விடும். இதைப் போக்க பாட்டிலை இறுக மூடி, அரிசிமாவால் நன்றாக தேய்த்ததும் உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள். பிசுபிசுப்பு நீங்கி பளபளக்கும்.
- ஆர்த்தி ஸ்ரீராம், சென்னை-88
சுடிதார் செட் பழசானாலும் துப்பட்டா புதுசாகவே இருக்கும். அதை வீணாக்காமல் இரண்டாக கட் பண்ணி ஓரங்களை கடையில் கொடுத்துத் தைத்துவிடுங்கள். இந்தத் துணியை குளிர் காலத்துக்கு ஸ்கார்ப்பாகவும், ஹெல்மெட் போடும் முன் தலையில் கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.
- மனோகரன், சேலம்-6
முல்லை, மல்லிகளை உதிரிப்பூவாக வாங்கி தொடுக்கும்போது இடையிடையே சாட்டின் ரிப்பன் அல்லது உல்லன் நூலை மடித்து வைத்து கட்டினால் உடுத்தும் உடைக்கு மேட்சாக இருப்பதுடன், பார்க்க அம்சமாக இருக்கும்.
- சாந்தி வேணுகோபால், சென்னை-23
ஃபிரெட்டில் ஜாம், தேன், வெண்ணெய் தடவி சாப்பிடுபவரா நீங்கள்? முதலில் பிரெட்டில் ஜாம் தடவிய பிறகு தேன், அதன் பிறகு வெண்ணெய் தடவினால் பிரெட்டில் எல்லாம் சீராக பரவும். சாப்பிடும்போது சிந்தாமல் இருப்பதோடு, ஃபிரெட் வாயிலும் ஒட்டிக் கொள்ளாது.
- கீதா நாராயணன், மும்பை-80
'kumudham'
பழமொழிகள்-தா,து,தொ & ந
தா
- தான் திருடன் பிறரை நம்பான்.
து
- துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
- துள்ளற மாடு பொதி சுமக்காது.
தொ
- தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்.
ந
- நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
- நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
- நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
- நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
- நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
- நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
- நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
- நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
- நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
- நயத்திலாகிறது பயத்திலாகாது.
- நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
- நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
- நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
- நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
- நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
- நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
- நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
- நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
- நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
பழமொழிகள்-சோ & த
சோ
- சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
- சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
- சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
த
- தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
- தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
- தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
- தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
- தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
- தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
- தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
- தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
- தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
- தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- தருமம் தலைகாக்கும்.
- தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
- தலை இருக்க வால் ஆடலாமா ?
- தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
- தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
- தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
- தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
- தவளை தன் வாயாற் கெடும்.
- தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
- தனிமரம் தோப்பாகுமா?
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

Wednesday, June 1, 2011
வாழ நினைத்தால் வாழலாம்...
திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக
ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே வாழலாம்..........
வாழச் சொன்னால் வாழ்கிறேன்
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்.........
வாழ நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

Subscribe to:
Posts (Atom)