Thursday, March 3, 2011
Spring, Summer, Fall, Winter and Spring
ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது

சென்னை : நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு 25 பைசா நாணயம் ஜூன் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கோ.ரா.ஆனந்தா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய நாணயச் சட்டம் 1906ன் கீழ், வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது.
எனவே, ஜூன் 29ம் தேதிக்குள் சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள், ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், பொதுமக்கள் இந்த நாணயங்களை மாற்றிக் கொண்டு அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, March 2, 2011
பூமியின் மொத்த மதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி...

லண்டன்: பூமி உட்பட கோள்களை கரன்சி மதிப்பில் கணக்கிடும் முறையை விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி. கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 ட்ரில்லியன் பவுண்டு. (1 ட்ரில்லியன் =1 லட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 லட்சம் மட்டுமே.
உலோகத்தில் வெள்ளியே பரவாயில்லை போலிருக்கிறது. ஒரு கிராம் ரூ. 55 வரை விற்கிறது. வெள்ளி கிரகம் ஒரு ரூபாயை விட குறைந்த மதிப்புடன் கடைசி இடத்தில் இருக்கிறது. தவிர, 1,235 கிரகங்கள் உயிரினங்கள் கால் வைக்க முடியாத நிலையில் எல்லா வகையிலும் எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவதால், அவற்றுக்கு பண மதிப்பே இல்லை என்கிறார் கிரேக். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் கெப்ளர் விண்கலத்தின் மதிப்பு ரூ. 4,320 கோடி என்ற அடிப்படையில், கிரகங்களின் மதிப்பை கிரேக் கணக்கிட்டுள்ளார். கிரகங்களை கண்டுபிடிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்ட கெப்ளர் விண்கலத்தின் மதிப்பை வைத்து, பல்வேறு கிரகங்களின் முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பை அவர் நிர்ணயித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்த பார்முலாவின்படி விலை மதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், பூமியைப் போல அதிக மதிப்புள்ள கிரகங்களும் இல்லை என்பதை உணர முடிகிறது’’ என்றார்.
கடலுக்கு அடியில் மூலிகை: மலேரியாவை துரத்தும் பாசி

ஜார்ஜியா: கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுப்புது மருந்துகளும் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில், சீ வீட் என்ற கடல் தாவரம் மலேரியா காய்ச்சலை எளிதாக கட்டுப்படுத்தும் என்ற தகவல் தற்போதைய ஆய்வில் வெளியாகி உள்ளது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக நீண்ட ஆய்வு மேற்கொண்டனர். சீ வீட் தாவரத்தில் உள்ள ரசாயனப் பொருள், மலேரியா கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ளது. அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட இத்தாவரம், ஃபங்கல் என்ற காளான் வகை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு முடிவுகள் இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன. அதன்பிறகே இந்த தாவர மருந்து சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
Tuesday, March 1, 2011
நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி!
மன உறுதியுடன் இருங்கள்

* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.
* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.
பின்னோக்கிச் செல்லும் பில்லா!

பில்லா 2-வை திரையில் கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து கே.பாலாஜி தயாரித்த பில்லா திரைப்படம், 2007ம் ஆண்டு அஜீத் நடிப்பில் அதே பெயரில் வெளியானது.
இப்போது மும்பையை சேர்ந்த ஐ.என்.எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சுரேஷ் பாலாஜி - ஜார்ஜ் பயஸ்- ஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'பில்லா -2' என்ற பெயரில் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.
தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா படத்துக்கு பின் அஜீத் - யுவன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
புதிய கதையம்சத்தோடு உருவாகும் இப்படத்தில் பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கிறது என அஜீத்த்தும் யுவனும் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இப்படத்தை இயக்க இருக்கிறார்.
மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.
இப்படத்தின் கதைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டாம். இதுவரை சீரிஸாக வந்தப் படங்களின் கதை, முந்தைய பார்ட் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கும்.
ஆனால், பில்லா 2 அப்படியில்லாமல், 'பில்லா 1'வின் கதை பின்னோக்கிச் செல்லுமாம். அதாவது, 'டேவிட் எப்படி பில்லா'வாக மாறினான் என்பதே பில்லா 2-வின் மையமாம்!
